![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழிலதிபர்கள் மோசமான காலகட்டத்தை கடந்திருப்பார்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகளிடம் இருந்து உங்களுக்கு உண்டாக சதிகள், அரசியல் மற்றும் துரோகங்களால் நீங்கள் உங்கள் மன நிம்மதியை இழந்திருப்பீர்கள். நிதி இழப்புகளும் உங்களுக்கு ஏற்பட்டிருந்திருக்கும். உங்கள் தொழிலில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழலில் இருந்திருப்பீர்கள்.
குரு தற்போது நவம்பர் 2௦, 2020 முதல் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் வேலை பளு மற்றும் அழுத்தம் குறையும். உங்கள் மறைமுக எதிரிகளை நீங்கள் கண்டறிந்து அவர்களிடம் இருந்து விலகி விடுவீர்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். வங்கி மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து ஜனவரி 2021 வாக்கில் உங்கள் தொழிலை விரிவு படுத்த உங்களுக்கு நிதி உதவிகள் கிடைக்கும்.
பெரும் அளவு வெற்றிப் பெற்று உங்கள் செலவுகளை கட்டுபாடிற்குள்ளும் கொண்டு வருவீர்கள். உங்கள் நிதித் தேவைகளையும் வரும் நாட்களில் எளிதாக சந்திப்பீர்கள். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் ஏப்ரல் 5, 2021 வரை மட்டும் தான் என்பதால் நீங்கள் உங்கள் தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் கவனமாக இருக்க வேண்டும். குறுகிய கால ப்ரோஜெக்ட்டுகளில் வேலை பார்த்தாலே உங்களுக்கு அதிக பண வரத்து உண்டாகும். உங்கள் லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்யும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic