குரு பெயர்ச்சி (2020 - 2021) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குரு உங்கள் ஜென்ம ராசியில் கடந்த ஒரு ஆண்டு காலம் சஞ்சரித்து உங்கள் சொந்த வாழ்க்கையையும், உறவுகளையும் மிக மோசமாக பாதித்து இருந்திருப்பார். புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் பிரியும் சூழலில் இருந்திருப்பார்கள். அக்டோபர் 2020 வரை நீங்கள் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்திருந்தால், உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் தற்போது குறிப்பிடும் அளவு குறையும். டிசம்பர் 2020 முதல் வாரம் முதல் எதிர்பாராவிதமாக உங்கள் மனைவி/கணவன் மீது உங்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகும். உங்கள் மனைவி/கணவனிடம் இருந்து உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். இதனால் உங்கள் குடும்ப வாழ்க்கை சுமூகமாக நடக்கும்.
கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், குரு ராகுவை 6ஆம் வீட்டில் பார்வை இடுவதும், உங்கள் திருமண வாழ்க்கைக்கு சிறப்பாக உள்ளது. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வரும் நாட்களில் உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடந்த நாட்களில் உங்களுக்கு நன் மதிப்பு தராதவர்கள், தற்போது உங்களுடன் மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள முயற்சிப்பார்கள். டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic