![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | முதல் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் பெப்ரவரி 21, 2021 வரை நல்ல முன்னேற்றம் (70 / 100)
குரு மற்றும் சனி பகவான் இணைந்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உங்களுக்கு இந்த பெயர்ச்சியில் உண்டாக்குகிறார்கள். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் மேலும் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது.
இந்த பாகத்தை நீங்கள் அடைந்ததும், கடந்த நாட்களில் நடந்த மோசமான சம்பவன்களை நீங்கள் ஜீரணிக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் உடல் உபாதைகள் மற்றும் மன உளைச்சல்களில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் நேசிப்பவர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். காதலர்கள் மன உளைச்சல்களில் இருந்து வெளி வருவார்கள். கடந்த நாட்களில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் இருந்து வெளி வந்து உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்க முயற்சி செய்வீர்கள்.
உங்களுக்கு தற்போது நல்ல உத்தியோகம் இல்லாமல் இருந்தால், அது குறித்த முயற்சிகளை எடுக்க இது நல்ல நேரம். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் நலல் முன்னேற்றம் ஏற்படும். மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்திகளைப் பெறுவீர்கள். பங்கு சந்தை வர்த்தகத்திலும், முதலீடுகளிலும், வரும் நாட்களில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic