![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | உடல் நலம் |
உடல் நலம்
ஜனவரி 2020 முதல் அக்டோபர் 2020 வரை உங்களுக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகள் மற்றும் உளவியல் மன அழுத்தத்தை பற்றி விவரிக்க வார்த்தைகளே இருக்காது. பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பால், உங்கள் சக்தி மிகவும் விரைவாக கரைந்திருக்கும். சரியான தூக்கம் இல்லாததால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்திருக்கும். வலியால் நீங்கள் மயக்கம் அடைந்து விழுந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், ராகு 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் நேர்மறை சக்திகளை அதிகப்படுத்துவார்கள். அடுத்த சில வாரங்களில் நீங்கள் உங்கள் சக்தியை மீண்டும் பெற்று, உங்கள் மனதை நிலைப்படுத்துவீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் இழந்த தூக்கத்தை மீண்டும் பெறுவீர்கள். சரியான மருந்து கிடைத்து மீண்டும் உங்கள் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாதங்கள் மட்டும் நடக்கும் ஒரு விரைவான குரு பெயர்ச்சியாகும். நீங்கள் விரைவாக நேர்மறை சக்திகளை எதிர்பார்க்கலாம். உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அழகு குறித்த அறுவைசிகிச்சை செய்து கொள்ள இது நல்ல நேரம். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நல்லள ஈர்க்கும் சக்தியைப் பெறுவீர்கள். பெப்ரவரி 2021 வாக்கில் நீங்கள் காதலில் விழுந்தால், அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
Prev Topic
Next Topic