குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

காதல்


செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் காதலர்கள் மிகவும் மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருப்பார்கள். உங்கள் குடும்பத்தில் நடந்த சண்டைகளாலும், கருத்துவேருபாடுகளாலும், நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்திருக்கக் கூடும். குரு தற்போது உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து ஜனவரி 21, 2021 வாக்கில் நீங்கள் மீண்டும் ஒன்று சேர உங்களுக்கு வாய்ப்பை உண்டாக்கி கொடுப்பார். இந்த காலகட்டத்தை நீங்கள் கடந்து விட்டீர்கள் என்றால், அதன் பின் புதிதாக ஒரு உறவை ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு நீங்கள் தயாராகி விடுவீர்கள்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்து விட்டால், வரும் நாட்களில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். ஏப்ரல் 5, 2021க்கு முன் திருமணம் செய்து விடுவது நல்லது. இல்லையென்றால், அக்டோபர் 2021 அல்லது மே 2022 வாக்கில் உங்கள் திருமணம் தள்ளிப்போகக் கூடும்.


புது வீட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை உங்களுக்கு நேர்மறை பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் காதலிலும் விழுவீர்கள்.


Prev Topic

Next Topic