![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி இருந்திருப்பார். ராகு உங்கள் களத்திற ஸ்தானத்திலும், கேது உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும் சஞ்சரித்து செப்டம்பர் 25, 2020 வரை உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கி இருந்திருப்பார்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து நல்ல நிலையில் சஞ்சரிப்பார். நவம்பர் 2௦, 2020 முதல் நீங்கள் நல்ல பலனை பார்க்கத் தொடங்குவீர்கள்.
மகர ராசியில் நிகழும் இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாதங்கள் மட்டுமே இருக்கும் ஒரு குறுகிய கால பெயர்ச்சியாகும். இதற்கு காரணம், குரு மகர ராசியில் மார்ச் 3௦, 2020 முதல் ஜூன் 3௦, 2020 வரையிலான 3 மாத காலம் தனுசு ராசி பெயர்ச்சியின் ஒரு பாகமாக சந்தரித்தார். மேலும் கும்ப ராசி பெயர்ச்சியின் ஒரு பாகமாக மகர ராசியில் செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான 2 மாத காலகட்டத்தில் சஞ்சரிப்பார். அதனால் ஏப்ரல் 5, 2021 அன்று கும்ப ராசியில் நிகழும் குரு பெயர்ச்சி ஒரு இயல்பான ஒன்றாக இருக்கும்.
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டை பார்வை இடுவதால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த சஞ்சாரம் ஏழரை சனியின் தாக்கத்தையும் குறைக்கும். கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து நிகழும் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நவம்பர் 2௦, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரை நீங்கள் சிறப்பான வளர்ச்சியையும், வெற்றியையும் தொடர்ச்சியாக காண்பீர்கள். இந்த காலத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic