குரு பெயர்ச்சி (2020 - 2021) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

பெப்ரவரி 21, 2020 முதல் ஏப்ரல் 14, 2021 வரை பொற்காலம் (95 / 100)


செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். இந்த சந்தாரத்தால் இந்த பாகத்தில் உங்களுக்கு இருக்கும் மறைமுக எதிரிகள் முற்றிலுமாக இல்லாமல் போவார்கள். மேலும் குரு செவ்வாயை பார்வை இடுவதால் குரு மங்கள யோகம் உண்டாவதால், உங்கள் வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பெர்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நல்ல சௌகரியத்தைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் நடத்துவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து உங்களுக்கு திருமணமும் நடக்கும். நீங்கள் காதலில் விழவும் வாய்ப்பு உள்ளது.


உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்தால், அது உங்களுக்கு இந்த பாகத்தில் கிடைக்கும். வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். புது வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது சொத்துக்களில் முதலீடு செய்ய இது சிறப்பான நேரம். நல்ல சேமிப்புகள் உண்டாவதால் நீங்கள் அதிகம் பாதுகாப்பாக உணருவீர்கள்.
பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்கும். ஆப்சன் வர்த்தகம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றை இந்த பாகத்தில் முயற்சிக்கலாம். ஆனால் இந்த பாகம் ஏப்ரல் 5, 2021 வரையிலான குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஏப்ரல் 5, 2021க்குள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும்.




Prev Topic

Next Topic