குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த ஒரு ஆண்டு காலமாக ஜென்ம குரு உங்கள் வளார்ச்சியை முற்றிலுமாக பாதித்திருந்திருப்பார். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுடன் செப்டம்பர் 2020 வரை கசப்பான அனுபவங்களை தந்திருப்பார். செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் உண்டாகி இருந்திருக்கும். மேலும் மோசமான சூழலில், உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் மீனும் உங்கள் தாய் நாட்டிற்கு நவம்பர் 2020-க்கு முன் வந்திருப்பீர்கள். ஆண்டு நிதி சன்மானங்கள் மற்றும் போனஸ் போன்ற விடயங்களில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்திருக்கும்.
தற்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து விட்டீர்கள் என்று மகிழ்ச்சி அடையலாம். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியை உண்டாக்க நல்ல பலன்களைத் தருவார். தற்போது உங்களுக்கு வேலை இல்லை என்றால் அல்லது குறைந்த சம்பளத்திற்கு நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு நவம்பர் 2௦, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் நல்ல சம்பளத்தோடு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் நீங்கள் வேலை பார்ப்பீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் வளார்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.


இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களது கடின உழைப்பிற்கேற்ற சிறப்பான நிதி சன்மானங்களும், அங்கிகாரமும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். மேலும் குடியேற்ற பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். அரசு வேலை கிடக்கவும் இது நல்ல நேரமாக உங்களுக்கு உள்ளது. ஏப்ரல் 5, 2021 முதல் சில பின்னடைவுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic