குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


நவம்பர் 2௦, 2020 முதல் தற்காலிகமாக தொழிலதிபர்களுக்கு ஒளி மிகுந்த காலம் நிறுத்தப்படலாம். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக சவால்களையும், உங்களுக்கு எதிரான சதிகளையும் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் நீண்ட காலத்திற்கு சஞ்சரிப்பதால், உங்களால் இந்த கடுமையான சூழலை சமாளித்து விட முடியும். சிறு தவறுகளால் உங்கள் போட்டியாளர்களிடம் நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை இழக்க நேரிடலாம். உங்கள் மரிமுக எதிரிகளிடம் இருந்து உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். உங்களுக்கு எதிரான சதிகளால் உங்கள் மீது தவறான குற்றச்சாட்டு ஏற்படலாம்.
உங்கள் தொழில் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும் மோசமான சூழலில், இந்த பிரச்சனைகளை சரி செய்ய உங்களுக்கு சட்ட உதவி தேவைப்படலாம். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படலாம். பண விடயங்கில் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் நிதி தேவைகளுக்காக நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டிய தேவை உண்டாகலாம். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் எந்த பலனும் இன்றி கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உண்டாகும்.


ஆனால் இந்த கடினமான நேரத்தை உங்களால் ஏப்ரல் 5, 2021 வரை சமாளித்து விட முடியும். உங்கள் தொழிலும் நீங்கள் அதன் பின் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். குரு உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2023 வரை நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic