![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கல்வி |
கல்வி
கடந்த ஒரு ஆண்டு காலமாக மாணவர்கள் சிறப்பாக செயல் பட்டிருந்திருப்பர்கள். புது பள்ளி அல்லது கல்லூரியில் உங்களுக்கு சேர்க்கை கிடைத்ததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தற்போது முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக நகருவதால் நீங்கள் அதிக தடைகளை சந்திப்பீர்கள். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். அதனால் உங்களால் விளையாட்டில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம்.
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்படக் கூடும். நீங்கள் முதுநிலை பட்டம் அல்லது Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், பல்கலைகழகத்தில் உங்கள் பேராசிரியருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் ஆய்வறிக்கையை முடித்து பட்டம் பெறுவதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம். மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு சரியான தங்கும் வசதி கிடைப்பதில் கடினமான சூழல் நிலவலாம். ஏப்ரல் 5, 2021 வரை உங்கள் உயர் கல்வியில் ஜ்நீங்கள் நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic