குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நிதி / பணம்


கடந்த ஒரு ஆண்டு காலம் உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்திருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், குரு 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஜனவரி 2020 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்திருப்பார்கள். ரியல் எஸ்டேட், பங்குகள் மற்றும் பிற முதலீடுகளில் நீங்கள் நல்ல பணத்தை ஈட்டி இருந்திருப்பீர்கள். ஆனால் தற்போது குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் அதிர்ஷ்டத்தை நவம்பர் 2௦, 2020 முதல் முற்றிலுமாக பாதிப்பார்.
உங்கள் சேமிப்புகள் பயணம், மருத்துவ செலவுகள் மற்றும் குடும்பத் தேவைகளுக்காக விரைவாக கரையும். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதும், யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதும் நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு புதிதாகவும் கடன் உண்டாகலாம். உங்கள் வங்கிக் கடன் அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் தொடர்தியாக வந்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களை உபசரிக்கும் பொருட்டு உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.


முடிந்த வரை பணம் கடன் கொடுப்பது, அல்லது கடன் வாங்குவது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பங்குதாரர்கள் உங்களை பண விடயங்களில் மிகவும் மோசமாக ஏமாற்றி விடக் கூடும். சனி பகவான் இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், நீங்கள் அவமானப்படும் சூழல் உண்டாகாது. பெருமாளை வணங்கி, சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் உங்கள் நிதி பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.


Prev Topic

Next Topic