குரு பெயர்ச்சி (2020 - 2021) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நவம்பர் 20, 2020 முதல் பெப்ரவரி 21, 2021 வரை குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் (45 / 100)


ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், கேது ஜென்ம ராசியிலும், குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த பாகத்தில் உங்களுக்கு கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்துவார்கள். உங்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் தேவையற்ற பயமும், பதற்றமும் அதிகரிக்கும். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் பங்குதாரருடன் இருக்கும் உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், விடயங்கள் மோசமாகாது.
உங்கள் குழுவில் புதிதாக ஊழியர்கள் சேருவதாலும், அலுவலகத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதாலும், அரசியல் அதிகரிக்கக் கூடும். இருப்பினும், சனி பகவானின் பலத்தால் உங்களால் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்து விட முடியும். தொழிலதிபர்கள் போட்டியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிகரிக்கும் மருத்துவ மற்றும் பயண செலவுகள் உங்கள் சேமிப்பை பாதிக்கும். உங்கள் வங்கிக் கடன் போதிய ஆவணங்கள் இல்லாததால் ரத்தாகலாம்.


முடிந்த வரை பயணத்தை தவிர்த்து விடுவது நல்லது. விசா குறித்த விடயங்களில் அதிக தாமதங்கள் ஏற்படலாம். யாரிடமும் பணம் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை வர்த்தகத்தில் எந்த ரிஸ்க்கும் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள்.


Prev Topic

Next Topic