![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | உடல் நலம் |
உடல் நலம்
ஜனவரி 2020 முதல் குரு மற்றும் சனி பகவானின் பலத்தால் உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்திருக்கும். அறுவைசிகிச்சையில் இருந்து மீண்டும் குனமடைந்திருப்பீர்கள். கடந்த மாதங்களில் அழகு குறித்த அறுவைசிகிச்சை செய்ததால், உங்கள் தோற்றமும் மேம்பட்டிருக்கும். ஆனால், நவம்பர் 2௦, 2020 முதல் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சவால்களை கொண்டுவருவார். ராகு மற்றும் கேதுவும் கூட சிறப்பான நிலையில் சஞ்சரிக்கவில்லை. அதனால் உங்களுக்கு உடல் உபாதைகள் இருக்கும்.
உங்கள் மனைவி/கணவனின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். ஜீரணம், வயிறு அல்லது கொழுப்பு நிறைந்த கல்லீரல், கொழுப்பு சத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சனி / புதன் அந்தரதசை நடப்பவர்களுக்கு சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இந்த குரு பெயர்ச்சியில் உங்களை சுற்றி தவறான நண்பர்கள் வட்டாரம் உண்டாகும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால் நீங்கள் மது, புகை, போதை பொருள் போன்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. நீங்கள் உங்கள் வீட்டை விட்டு தொலைதூரத்தில் வசிக்கின்றீர்கள் என்றால், அதிகம் தனிமையாக உணருவீர்கள். ஹனுமான் சாலிசா கேட்டு உங்கள் உடல் நல பிரச்சனைகளின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic