குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்


கடந்த ஒரு ஆண்டு காலமாக அணைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரித்ததால், நீங்கள் பொற்காலத்தை உங்கள் காதல் வாழ்க்கையில் கண்டிருப்பீர்கள். நீங்கள் விரும்பியவருடனே உங்களுக்கு திருமணமும் நடந்திருக்கும். ஆனால், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 25, 2020 அன்று நடந்த ராகு /கேது பெயர்ச்சியால் சில பின்னடைவுகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். குருவும் நவம்பர் 2௦, 2020 முதல் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பார். இதனால் உங்கள் காதல் வாழ்க்கையில் அதிக சவால்கள் உண்டாகும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் 5, 2021 வரை திருமணத்திற்கான முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் காதலை கூறவும் இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் முன்பே யாரையாவது விரும்புகிறீர்கள் என்றால், அவருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படக் கூடும். இதனால் உங்கள் வாழ்க்கையில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். இது குறிப்பாக நீங்கள் உத்தியோகம் செய்யும் இடம், வெளிநாட்டு பயணம் அல்லது திருமணம் செய்யும் நேரம் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.


புதிதாக திருமணமான தம்பதியினர் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பெப்ரவரி மற்றும் மார்ச் 2021 வாக்கில் நீங்கள் சில பிரச்சனைகளால் தற்காலிகமாக பிரிய நேரிடலாம். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இல்லாமல் குழந்தை பேறுக்கு திட்டமிடுவதை தவிர்த்து விடுவது நல்ல யோசனையாக இருக்கும்.


Prev Topic

Next Topic