குரு பெயர்ச்சி (2020 - 2021) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


சனி பகவான் மற்றும் குரு கடந்த ஒரு ஆண்டு காலமாக உங்களுக்கு சாதகமான நிலையில் சஞ்சரித்ததால் நீங்கள் அற்புதமான நேரத்தை பெற்றிருப்பீர்கள். சனி பகவான் இந்த 2021ஆம் ஆண்டும் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் இருந்து 3ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 முதல் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான செய்தி இல்லை. வரும் நாட்களில் உங்களுக்கு தடைகளும், பின்னடைவுகளும் ஏறபடக் கூடும். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் பாதிப்பை உண்டாக்கக் கூடும் கேது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளை உண்டாக்குவார்.
மகர ராசியில் நிகழும் இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாதங்கள் மட்டுமே இருக்கும் ஒரு குறுகிய கால பெயர்ச்சியாகும். இதற்கு முக்கிய காரணம், குரு மார்ச் 3௦, 2020 முதல் ஜூன் 3௦, 2020 வரையிலான 3 மாத காலகட்டத்தை மகர ராசியில் தனுசு ராசி பெயர்ச்சியின் போது சஞ்சரித்து விட்டார். மேலும் வரும் அடுத்த கும்ப ராசி பெயர்ச்சியின் போது செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான 2 மாத காலகட்டத்தை மகர ராசியில் சஞ்சரிப்பார். அதனால், ஏப்ரல் 5, 2021 அன்று கும்ப ராசியில் நிகழும் குரு பெயர்ச்சி ஒரு இயல்பான பெயர்சியாகவே இருக்கும்.


குரு ஐந்தாம் பார்வையை ராகுவையும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும். ஆனால் இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாத காலத்திற்கு மட்டுமே இருக்கும். மேலும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு பாதுகாப்பை தருவார். மேலும் விடயங்களை மீண்டும் இயல்பான நிலைக்கு உங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர உதவி செய்வார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள், உத்தியோகம் மற்றும் நிதி நிலை குறித்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளும், அரசியலும் நடக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.



Prev Topic

Next Topic