![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | இரண்டாம் பாகம் |
பெப்ரவரி 21, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 வரை குடும்பம் மற்றும் நிதி பிரச்சனைகள் (35 / 100)
செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து சஞ்சரித்து எதிர்மறை சக்திகளை பல மடங்கு அதிகரிப்பார். தற்போது நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் கூடும். உங்கள் உடல் நலம் பாதிக்கக் கூடும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அதிகரிப்பதால் நீங்கள் நல்ல தூக்கத்தை இழக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
தவறான முதலீடுகளால் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். இல்லையென்றால், பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். பங்கு சந்தை வர்த்தகம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், இந்த 6 வார காலத்திற்கு நீங்கள் எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. பங்கு சந்தையில் இருந்து முதலீடுகளை பணமாக்கி, பங்கு சந்தையை விட்டு விலகி இருப்பது நல்லது.
குறிப்பு: நீங்கள் பங்குகளை விற்க நினைத்தால், அதன் விலை அதிகரித்துக் கொண்டே போகும். அது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கி விடக்கூடும். நீங்கள் பங்குகளை வாங்க நினைத்தால் அஹ்டன் விலை சரியும், மேலும் இது உங்களுக்கு கசப்பான அனுபவத்தை தந்துவிடும். உங்களால் கிரகங்களை எதிர்த்து இந்த காலகட்டத்தில் வெற்றிப் பெற முடியாது.
Prev Topic
Next Topic