![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்திருப்பார்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020 வரை உங்களுக்கு விண்ணைத் தொடும் அளவு லாபம் ஏற்பட்டிருந்தால், அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால் வரும் நாட்களில் உங்கள் முதலீடுகளில் அதிக பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் பங்கு சந்தை குறித்த கணிப்புகள் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவேடுபதால் தவறாகலாம். இதனால் நவம்பர் 2௦, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் அதிக பணத்தை இழக்க நேரிடும்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு நீங்கள் முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. நீங்கள் நீண்ட கால முதலீடுகள் செய்பவராக இருந்தால், ரிஸ்க் இருக்கும் முதலீடுகளை பணமாக்கி விடுவது நல்லது. உங்கள் பணத்தை பத்திரம், அல்லது நிரந்தர வைப்பு நிதி, வங்கி சமிப்பு என்று பாதுகாப்பாக வைப்பது நல்லது. ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் வீடு மற்றும் நிலத்தை வாடகைக்கு விட்டிருந்தால், அதனால் சில பிரச்சனைகளும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்ப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic