![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உங்கள் உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருப்பீர்கள். நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைத்திருக்கும். தற்போது நீங்கள் உங்களுக்கு கிடைத்துள்ள புதிய பதவியில் உங்கள் திறமையை நிரூபிக்கவும், தற்போது இருக்கும் நிலையில் உங்களை தக்கவைத்துக் கொள்ளவும் இது சரியான நேரம். உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமைப் படக் கூடும். குரு ராகுவை நவம்பர் 2௦, 2020 முதல் ஐந்தாம் பார்வையை பார்வை இடுவதால் உங்களுக்கு அதிக மறைமுக எதிரிகள் உருவாவார்கள்.
உங்கள் வேலை சுமை அதிகரித்துக் கொண்டே போகும். அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கும். உங்கள் முதலாளி உங்களது வேலை மற்றும் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உங்கள் முதலாளியுடன் உங்களுக்கு பெப்ரவரி 21, 2021 முதல் மார்ச் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். கேது, செவ்வாய் மற்றும் குரு சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், இது உங்களுக்கு கடுமையான சோதனை காலமாக இருக்கும். ஆனால் சனி பகவான் உங்களை பாதுகாத்து, விடயங்கள் இயல்பான நிலைக்கு வர உதவுவார்.
யாருடனும் சண்டையில் ஈடுபடுவது நல்ல யோசனையாக இருக்காது. ஆனால், விடயங்கள் மோசமாகி, உங்களுக்கு அதிக பிரச்சனைகளை உண்டாக்கும். சட்ட பிரச்சனைகள் அல்லது உங்கள் எச் ஆரிடம் நீங்கள் புகார் கூறுவது போன்ற விடயங்கள் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் சம்பள உயர்வு அல்லது வேறு ஏதாவது பலன்களை எதிர்பார்த்தால், அது உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும். உங்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள, நீங்கள் தற்போது இருக்கும் நிலையிலேயே உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. உங்களக்கு ஒரு நல்ல நல்ல செய்தி என்னவென்றால், இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாதம் மட்டும் இருக்கும் குறுகிய கால பெயர்ச்சியாகும். அதனால் ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் உத்தியோகத்தில் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள்.
Prev Topic
Next Topic