குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்கள், நிதி இழப்புகள் மற்றும் அவப்பெயர் போன்றவற்றைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இருக்காது என்று கூறலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகி இருந்திருந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. பண விடயங்களில் கடன மாதங்களில் நீங்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருந்திருக்காலாம். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாக உள்ளது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
உங்கள் மறைமுக எதிரிகள் குரு உங்கள் பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்து பலம் பெறுவதால், சக்தி இழப்பார்கள். நீங்கள் உங்களுக்கு பிரச்சனைத் தருபவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து விலகி செல்வீர்கள். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.



உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை உண்டாக்க நீங்கள் பல புதுமையான யோசனைகளை கொண்டு வருவீர்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு பல நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். வெளி நாட்டில் இருந்தும் வன வரத்து உண்டாகும். புது தொழிலைத் தொடங்க இது சிறப்பான நேரம். மேலும் உங்கள் தொழிலையும் நீங்கள் விரிவு படுத்த இது ஏற்ற நேரம். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். புது முதலீட்டாளர்களிடம் இருந்து உங்களுக்கு போதிய நிதி கிடைக்கும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு, புகழ் மற்றும் சன்மானன்களால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.




Prev Topic

Next Topic