குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

கல்வி


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சஞ்சரித்து உங்களுக்கு அதிக தோல்விகளையும், ஏமாற்றங்களையும் ஏற்படுத்தி இருந்திருப்பார். மன உளைச்சலின் காரணமாக உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போயிருந்திருக்கும். குரு தற்போது நவம்பர் 2௦, 2020 முதல் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் உங்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து வெளி வர உதவி செய்வார். நீங்கள் வரும் நாட்களில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்குவீர்கள். உங்களுக்கு புகை அல்லது மது பழக்கம் இருந்தால், அதில் இருந்து அடுத்த சில வாரங்களில் முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.
கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறை நீங்கள் தற்போது உணருவீர்கள். அடுத்த ஒரு ஆண்டுக்கு பரிச்சையை சிறப்பாக எழுதுவீர்கள். உங்களுக்கு சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் அடுத்த 2021ஆம் ஆண்டு சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் டிசம்பர் 2020 முதல் நெருக்கமான நட்போடு இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் முதுநிலை பட்டம் அல்லது Ph.D படிக்கும் மாணவராக இருந்தால் உங்கள் ஆய்வறிக்கை டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்திற்குள் ஒப்புதல் பெரும். நீங்களும் உங்கள் பட்ட படிப்பை நல்லபடியாக முடித்து விடுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic