குரு பெயர்ச்சி (2020 - 2021) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


கடந்த நவம்பர் 2019-ன் குரு பெயர்ச்சி உங்களுக்கு வலி மிகுந்த சம்பவங்களை அதிகம் தந்திருக்கும். அது தற்போது ஒரு முடிவுக்கு வரவுள்ளது. குரு 3௦ கோணத்தை ஒரே முறையில் கடந்து விரைவாக நகருவதால். உங்களுக்கு கிடைக்குள்ள நலல் அதிர்ஷ்டமும் விரைவாகவே கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு போதிய சக்தி கிடைக்கும்.
உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அதில் இருந்து வெளி வந்து, புதிதாக உங்கள் வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்திருந்தால், மீண்டும் அவர்களுடன் சேர இது நல்ல நேரம். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்து விடுவீர்கள். நீங்கள் உத்தியோகம், பயணம் அல்லது சொந்த காரணங்களால் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு தற்காலிகமாக பிரிந்திருந்தால், அவர்களுடன் மீண்டும் சேர்ந்து நல்ல வாழ்க்கையை வாழ நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.


திருமணம், புதுமனை புகு விழா, ஆண்டு விழா போன்ற சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பத்தினர்கள் சமுதாயத்தில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெறுவார்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு மதிப்பு தராதவர்கள், தற்போது உங்களுடன் மீண்டும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.


Prev Topic

Next Topic