குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

நிதி / பணம்


கடந்த ஒரு ஆண்டு காலமாக சாதகமற்ற குரு பெயர்ச்சியில், குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்ததால், உங்கள் கடன் நீங்கள் பீதி அடையும் அளவு அதிகரித்திருந்திருக்கும். நீங்கள் பணத்தை இழந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு வங்கிக் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு போன்றவற்றால் உங்கள் கடன் மிக அதிக அளவை அடைந்திருந்தாலோ, அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தற்போது குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் விடயங்கள் சிறப்பாக உள்ளது. நவம்பர் 2௦, 2020 முதல் ஒரே இரவில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மாற்றங்களை எதிர் பார்க்கலாம்.
குரு மகர ராசியில் 3௦ கோணத்தை ஒரே முறையில் விரைவாக 4 1/2 மாத காலத்தில் கடப்பதால் நீங்கள் விரைவான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். உங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைபதற்கும் இது நல்ல நேரம். உங்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் பேசி உங்கள் கடனை செட்டில் செய்ய இது ஏற்ற நேரம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.


உங்கள் வருமானம் புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வால் அதிகரிக்கும். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். குறைந்த வட்டி விகிதத்திற்கு கடன் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். உங்கள் முந்தைய நிறுவனத்தில் இருந்து வர வேண்டிய நிலுவையில் இருக்கும் சம்பளம் அல்லது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட் போன்றவற்றால் ஒரு நல்லத் தொகை உங்களுக்கு கிடைக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.


Prev Topic

Next Topic