குரு பெயர்ச்சி (2020 - 2021) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

நவம்பர் 20, 2020 முதல் பெப்ரவரி 21, 2021 வரை சிறப்பான வளர்ச்சி (80 / 100)


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்த பின் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களது மோசமான காலகட்டம் முடிவடைந்து விட்டதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதனால் நிம்மதியாக இருக்கலாம். அடுத்த 3 ½ ஆண்டு நீண்ட காலகட்டத்திற்கு நீங்கள் சோதனை காலத்தை பற்றி நினைக்க வேண்டாம். நீங்கள் நீண்ட கால திட்டங்களை முயற்சித்து உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்கலாம்/ அடுத்த 3 1/2 ஆண்டு நீண்ட காலகட்டத்திற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கியே பயணிக்கலாம்.
சனி பகவான், மற்றும் குரு இணைந்து நவம்பர் 2௦, 2020 முதல் நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி சிறப்பான வளர்ச்சியைத் தருவார்கள். உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அளவு உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே உள்ளது. உங்கள் உடல் நல பிரச்சனைகள் மற்றும் மன வலியில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். காதலர்கள் மன உளைச்சலில் இருந்து வெளி வருவார்கள். கடந்த மாதங்களில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருந்தால், உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்கத் தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம்.


உங்களுக்கு தற்போது உத்தியோகம் இல்லை என்றால், புது வேலைக்கு முயற்சிக்க இது நல்ல நேரம். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் மன பலத்தை அதிகரித்துக் கொண்டும் உங்களை நீங்கள் நேர்காணலுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனவரி அல்லது பெப்ரவரி 2021 வாக்கில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


Prev Topic

Next Topic