குரு பெயர்ச்சி (2020 - 2021) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

உடல் நலம்


நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக அதிகப்படியான இன்னல்கள், வலி மிகுந்த சம்பவங்கள், மன வேதனைகள் மற்றும் உடல் நல பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். குறிப்பாக ஜூலை 2020 முதல் மிக அதிகமான பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 முதல் பெயர்ந்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். உங்களால் உங்கள் உடல் நல பிரச்சனையின் மூலக் காரணம் என்னவென்று கண்டறிய முடியும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். உங்கள் மனக் கவலை மற்றும் பதற்றத்தில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.
உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். குரு பெயர்ச்சியில் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் உங்களுக்கு சாதகமாக பலம் பெற்று இருப்பதால் நீங்கள் மீண்டும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். உங்களுக்கு மிக மோசமான காலகட்டம் முடிவடைவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.




Prev Topic

Next Topic