குரு பெயர்ச்சி (2020 - 2021) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சஞ்சரித்து உங்களுக்கு நிலுவையில் இருக்கும் வழக்கு மற்றும் நீதிமன்றம் குறித்த விடயங்களில் மிகவும் மோசமான பலன்களைத் தந்திருக்கக் கூடும். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்பட்டிருப்பீர்கள். ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் நற்பெயரை இழந்திருப்பீர்கள். இந்த தருணத்தில், நீங்கள் மிகக் கடுமையான மன அழுத்தம் மற்றும் உளவியில் ரீதியான பிரச்சனையில் இருந்திருப்பீர்கள். விவாகரத்து, குழந்தை காவல், ஜீவனாம்சம் போன்ற விடயங்கள் உங்களுக்கு எதிராகவே நடந்திருக்கும்.
நவம்பர் 2௦. 2020 முதல் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் நல்ல மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். கடந்த காலத்தில் நடந்த மோசமான சம்பவங்களை நீங்கள் ஜீரணிக்க முயற்சிப்பீர்கள். உங்கள் வழக்கறிஞரை மாற்றி விட்டு, உங்கள் வழக்கை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்து செல்ல இது நலல் நேரம். உங்கள் சொத்துக்கள் குறித்த பிரச்சனைகளில் இருந்து அடுத்த சில மாதங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்போடு வெளி வந்து விடுவீர்கள். டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021க்குள் கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic