குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

காதல்


காதலர்கள் ஆகஸ்ட் 2020 முதல் அதிக மன உளைச்சலை கண்டிருப்பார்கள். நீங்கள் விரும்புபவரை விட்டு நீங்கள் பிரிந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்களுக்கு நிச்சயமான திருமணமும் ரத்தாகி இருந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஒண்டும் இல்லை. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் நவம்பர் 2௦, 2020 முதல் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான ஜென்ம ராசிக்கு பெயர்ந்ததும் உடனடி மாற்றம் காணும்.
நீங்கள் விரும்புபவருடன் மீண்டும் உங்கள் உறவை புதுப்பித்துக் கொள்வீர்கள். அப்படி அது நடக்க வாய்ப்பு இல்லையென்றாலும், ஒரு புதிய உறவை ஏற்க நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைத்து அடுத்த சில மாதங்களில் உங்களுக்கு திருமணமும் ஏப்ரல் 2021க்குள் நடை பெரும்.


திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான காலகட்டத்தில் இருந்து வெளி வந்து தற்போது நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவீர்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் தற்போது அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். குழந்தைப் பேறு உங்களுக்கு இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ கிடைக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். உங்கள் கனவு சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட இது ஏற்ற நேரம்.


Prev Topic

Next Topic