![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | இரண்டாம் பாகம் |
பெப்ரவரி 21, 2021 ஏப்ரல் 5, 2021 வரை பொற்காலம் (95 / 100)
செவ்வாய் ராகுவுடன் இந்த காலகட்டத்தில் இணைந்து சஞ்சரிப்பார். குரு செவ்வாயை பார்வை இடுவதால், குரு மங்கள யோகம் உண்டாகி அதனால் உங்கள் வளர்ச்சியும் பல மடைந்து நல்ல அதிர்ஷ்டத்தோடு அதிகரிக்கும். நல்ல உடல் நலத்தோடு இந்த பாக காலகட்டத்தில் இருப்பீர்கள். மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், பல நேர்மறை மாற்றங்களும் நல்ல விடயங்களும் உங்கள் வாழ்க்கையில் நடப்பதால் நீங்கள் அதிக உற்சாகத்தோடு இருப்பீர்கள்.
உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். புது வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், அது தற்போது உங்களுக்கு கிடைக்கும். போனஸ், சம்பள உயர்வு, இடமாற்றம் மற்றும் குடியேற்ற பலன்கள் போன்ற பலன்கள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. தேவையற்ற செலவுகள் குறையும். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளிவந்து விடுவீர்கள். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் சேமிக்கத் தொடங்குவீர்கள். வர்த்தகத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். புது வீடு வாங்கவும், சொத்துக்களில் முதலீடு செய்யவும் இது நல்ல நேரம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic