குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த ஒரு ஆண்டு காலமாக உங்கள் உத்தியோகத்தில் அலுவலக அரசியல் மற்றும் உங்களுக்கு எதிரான சதிகளால் நீங்கள் பல பாதிப்புகளை சந்தித்திருந்திருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அவமானப் பட்டிருந்திருப்பீர்கள். குறிப்பாக ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை துரோகத்தால் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்திருப்பீர்கள். இப்போது, குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று உங்களுக்கு சாதகமாக பெயர்ந்ததும் விடயங்கள் விரைவாக மாற்றம் காணும்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தாலோ அல்லது தற்போது இருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல் இருந்திருந்தாலோ, அல்லது நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாலோ, அது உங்களுக்கு நல்ல சிறப்பான சம்பளத்திற்கு கிடைக்கும். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மறைமுக எதிரிகளை இல்லாமல் செய்து விடுவார். அதனால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் வரும் நாட்களில் விரைவான வெற்றியையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். நீங்கள் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை செய்வீர்கள். உங்களுக்கு அடுத்த 5 மாதங்களில் நல்ல பதவியும், சம்பள உயர்வும் கிடைக்கும்.


ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உண்டாகும் தாக்கம் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உண்டாகும் பலத்தால் குறைந்து விடும். வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். உங்கள் உத்தியோக வாழ்க்கையை சிறப்பாக சமாளிப்பீர்கள். நீங்கள் அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்து கொண்டிருகின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு ஜனவரி 2021 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்திற்குள் கிடைத்து விடும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கோ, உள்நாட்டு இடமாற்றம் அல்லது குடியேற்ற பலன்கள் போன்ற சலுகைகளை நீங்கள் உங்கள் நிறுவனத்தில் இருந்து எதிர் பார்க்கலாம்.


Prev Topic

Next Topic