![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கல்வி |
கல்வி
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன், ஆசிரியருடன் அல்லது பெற்றோருடன் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு கடுமையான பின்னடைவுகளை கடந்த ஒரு ஆண்டு காலமாக ஏற்படுத்தி இருந்திருக்கும். தற்போது நவம்பர் 2௦, 2020 முதல் குரு உங்களுக்கு நல்ல உதவியாக இருப்பார். டிசம்பர் 2020 முதல் விரைவாகவே நீங்கள் மீண்டும் நல்ல மன நிலையைப் பெறுவீர்கள். அடுத்த 6 மாதங்களுக்கு உங்கள் பள்ளி / கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.
புது நண்பர்கள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டில் சிறப்பாக செயல்படுவீர்கள். 2020 – 2021 பள்ளி ஆண்டில் நீங்கள் சிறப்பான மதிப்பென்களைப் பெறுவீர்கள். மேலும் அடுத்த 2021ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.
Prev Topic
Next Topic