![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு உங்கள் ஜென்ம ராசி, லாப ஸ்தானமான 11ஆம் வீடு மற்றும் பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டை நவம்பர் 2௦, 2020 முதல் பார்வை இடுகிறார். சனி பகவான் மற்றும் ராகுவால் உண்டாகும் தாக்கத்தை குரு குறைக்க உதவுவார். கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றார். அதனால் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
உங்கள் கடனை நிதி மறுபரிசீலனைச் செய்ய இது சிறப்பான நேரம். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்திற்கு எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். வெளிநாட்டில் இருந்தும் உங்களுக்கு பண வரத்து உண்டாகும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களது தேவையற்ற மருத்துவ மற்றும் பயணச் செலவுகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுக்கு தங்க நகைகள் வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்/ உங்களுக்கு நல்ல சேமிப்பு உண்டாவதாலும், உங்கள் கடன் குறைவதாலும், நீங்கள் மன நிம்மதியோடு இருப்பீர்கள். மேலும் இதனால் உங்களுக்கு நல்ல தூக்கமும் உண்டாகும். உங்கள் கனவு வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெப்ரவரி 21, 2021 முதல் மார்ச் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்ட சீட்டை முயற்சி செய்து பார்க்கலாம். புது கார் / வாகனம் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic