![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | உடல் நலம் |
உடல் நலம்
கடந்த மாதங்களில், குறிப்பாக ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தம், மற்றும் உளவியல் பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை விவரிக்க வார்த்தைகள் இருக்காது. மனக் கவலை மற்றும் மனதில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு குறைந்திருக்கும்.
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 முதல் பெயருவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக் கவலை மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் இழந்த தூக்கத்தை மீண்டும் பெறுவீர்கள். சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உளவியல் பிரச்சனைகளில் இருந்தும் வெளி வருவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
இந்த குரு பெயர்ச்சி ஏப்ரல் 5, 2021 வரை மட்டுமே இருக்கும் ஒரு குறுகிய கால பெயர்ச்சி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். போதிய சக்திகளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், குரு ஏப்ரல் 5, 2021 முதல் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic