![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | காதல் |
காதல்
ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரை காதலர்கள் மிகவும் வலி மிகுந்த சம்பவங்களை சந்தித்திருந்திருப்பார்கள். நீங்கள் இயல்பாகவே அதிகம் உணர்ச்சி வாப்படுபவராக இருந்தால், விடயங்கள் மிகவும் மோசமானதால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைசாலை சரி செய்ய உங்களுக்கு மருத்துவ உதவியும் தேவைப் பட்டிருக்கலாம். அக்டோபர் 2020 வரை காதல் தோல்வி, அவமானங்கள், துரோகங்கள் மற்றும் உங்களுக்கு எதிரான சதிகளால் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் .
நவம்பர் 2௦, 2020 முதல் குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து வெளி வர உங்களுக்கு நல்ல வழி பிறக்கும். குரு விரைவாக பெயர்ந்து 3௦ கோணத்தை ஒரே நேரத்தில் கடப்பதால், நீங்கள் விரைவாகவே நல்ல அதிர்ஷ்டத்தைக் காண்பீர்கள். டிசம்பர் 2020 வரை நீங்கள் பிறந்தவருடன் மீண்டும் சேர்ந்து உங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்க ஒரு வாய்ப்பு உள்ளது.
அப்படி இல்லையென்றால், ஜனவரி 2021 முதல் நீங்கள் புதிதாக ஒரு உறவைத் தொடங்க தயாராகி விடுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து பெப்ரவரி 2021க்கு மேல் திருமணமும் நிச்சயமாகும். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அனுயுநியத்தோடு டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். உங்களுக்கு குழந்தை பேறு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் குழந்தை பேருக்குத் திட்டமிடும் முன் உங்கள் மகா தசை சாதகமாக உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic