குரு பெயர்ச்சி (2020 - 2021) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், சனி பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் மனதை அதிகம் பாதித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தந்திருப்பார்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயருவது ஒரு சிறப்பான செய்தியாக உங்களுக்கு உள்ளது. 7 ஆண்டு காலத்திற்கு பிறகு குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
மகர ராசியில் நிகழும் இந்த குரு பெயர்ச்சி 4 1/2 மாத காலத்திற்கு நடக்கும் ஒரு குறுகிய கால பெயர்ச்சியாகும். இதற்கு காரணம், குரு மார்ச் 30, 2020 முதல் ஜூன் 3௦, 2020 வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் தனுசு ராசி பெயர்ச்சியின் போது மகர ராசியில் சஞ்சரித்ததும், மேலும் செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான இரண்டு மாத கும்ப ராசி பெயர்ச்சி காலத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கவுள்ளதும் தான். அதனால் கும்ப ராசிக்கு ஏப்ரல் 5, 2021 அன்று நடக்கும் குரு பெயர்ச்சி ஒரு இயல்பான பெயர்சியாகவே இருக்கும்.


குரு சனி பகவானோடு இணைந்து சஞ்சரித்து சனி பகவானால் உண்டாகும் பிரச்சனைகளை குறைக்க உதவுவார். அதானல் உங்கள் மன உளைச்சலில் இருந்து நீங்கள் வெளி வந்து விடுவீர்கள். வெளிநாட்டு பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மொத்தத்தில் ஏப்ரல் 5, 2021 வரை நடக்கும் இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic