![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து பங்கு சந்தை முதலீடுகள் குறித்த விடயங்களில் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். குறுகிய காலத்திலேயே உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நாள் வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் நல்ல லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் பெப்ரவரி மற்றும் மார்ச் 2021 வாக்கில் விண்ணைத் தொடும் லாபத்தை பெறுவார்கள். தங்கம் மற்றும் தங்கச் சுரங்க நிறுவனத்தில் நீங்கள் முதலீடுகள் செய்யலாம். பெப்ரவரி 21, 2021 வாக்கில் உங்கள் பிறந்த சாதக பலத்தோடு நீங்கள் அதிர்ஷ்ட சீட்டை முயற்சித்து வெற்றிப் பெற முயற்சிக்கலாம்.
புது வீடு வாங்கி குடி பெயர இது சிறப்பான நேரம். உங்கள் கனவு வீட்டை கட்டவும் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். உங்களிடம் சொத்துக்கள் இருந்தால், அதன் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய இது நல்ல நேரம். ஏப்ரல் 2021க்கு முன் உங்கள் சொத்துக்களை நீங்கள் அதிக விலைக்கு விற்று, குறைந்த விலையில் பல சொத்துக்களை வாங்கி உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic