குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த ஒரு ஆண்டு காலம் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் கலவையான பலன்களைப் பெற்றிருப்பீர்கள். குறிப்பாக சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பிறகு உங்கள் சொந்த மற்றும் குடும்ப பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் குறிக்கோள் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை நோக்கி எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்திருப்பீர்கள். மாறாக தற்போது நிலவும் சூழலால் அதிகம் மன அழுத்தத்துடன் இருந்திருப்பீர்கள்.
தற்போது குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். புது வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இது சிறப்பான நேரம். டிசம்பர் 2020 முதல் நேர்காணலில் பங்கு பெரும் போது எளிதாக அதில் வெற்றியையும் பெறுவீர்கள். உங்களுக்கு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் 2021 மாதங்களில் நல்ல சம்பளம், நல்ல பதவியோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்கு பயணம் செய்யவும் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளரிடம் இருந்து நல்ல உதவி கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல அங்கிகாரம் கிடைத்து அடுத்த 6 மாதங்களில் நல்ல சிறப்பான நிதி சன்மானங்களும் கிடைக்கும்.


குரு சனி பகவானோடு இணைந்து ராகுவை பார்வை இடுவதால், ஏப்ரல் 5, 2021 வரை உங்கள் அதிர்ஷ்டம் பலா மடங்கு அதிகரிக்கும். ஒப்பந்தம் ரீதியாக நீங்கள் பார்க்கும் வேலை நிரந்தரமாகும். அரசு வேலை வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்சூரன்ஸ், பங்குகள், மற்றும் குடியேற்றம் / விசா போன்ற விடயங்களில் உங்கள் நிறுவனத்தில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். அடுத்த 4 ½ மாத காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள். ஏப்ரல் 5, 2021க்கு பிறகு உங்கள் அலுவலகத்தில் அதிக அரசியல் நடக்கும்.


Prev Topic

Next Topic