குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

கல்வி


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021


பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022



குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் படிப்பை மிக மோசமாக பாதிப்பார். உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தவறான நண்பர்கள் வட்டாரத்தில் சேர்ந்து புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரலாம். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். மேலும் உங்கள் பல்லில்/ பல்கலைகழக பேராசிரியருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் ஆலோசகர் அல்லது பெற்றோர்களின் ஆலோசனைப் பெற்று நீங்கள் பாகம் 1 மற்றும் பாகம் 5 ஆகிய சோதனை காலத்தை கடக்க முயற்சிக்க வேண்டும்.
ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் பேராசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால், உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், மறுத்து பேசி வாக்குவாதங்கள் செய்யாமல் அமைதியாக சென்றுவிட முயற்சிப்பது நல்லது. குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது நீதிக்காக சண்டைப் போட்டு, வெற்றி பெற முயற்சிக்க முடியாது.

Prev Topic

Next Topic