குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022


ஜனவரி 2020 முதல் ஏலரணி சனியின் தொடக்கத்தால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ந்து ஏப்ரல் 5, 2021 முதல் உங்கள் நிலையை மேலும் மோசமாக்கலாம். பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் உங்கள் உறவுகள் குறித்த விடயங்கள் மிகவும் மோசமாக பாதிக்கக் கூடும். நீங்கள் எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் மனைவி/கணவன் மற்றும் உறவிணர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்குள் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதால், தற்காலிகமாக பிரியவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் பாகம் 2 மற்றும் 4 இல் விடயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படலாம். உங்களுக்கு நல்ல சக்தி கிடைத்து உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஜீரணித்து, நீங்கள் முன்னோக்கி நகரத் தொடங்குவீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம், அப்படி இல்லை என்றால் மே 2022 வரை காத்திருப்பது நல்ல யோசனையாக இருக்கும். ஏனென்றால், ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை நீங்கள் அவமானப்படும் வாய்ப்புகள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிகமாக உள்ளது.

Prev Topic

Next Topic