குரு பெயர்ச்சி (2021 - 2022) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

நிதி / பணம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

ஜென்ம குரு மற்றும் ஏழரை சனியால் உங்கள் நிதி நிலை அதிகரிக்கும் செலவுகளால் பாதிக்கப் படலாம். உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் விரைவாக கரையலாம். நீங்கள் ஏப்ரல் 2022 வரை மோசமான காலகட்டத்தை சந்திக்க நேரம். உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத மருத்துவ மற்றும் பயண செலவுகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்க நீங்கள் அதிக பணத்தை செலவு செய்வீர்கள். நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுக்கும் விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடையும் போது விடயங்கள் சற்று முன்னேற்றம் அடையும். நீங்கள் உங்கள் கடன்களை விரைவாக அடைக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும், ஆனால் இந்த முறை அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். நீங்கள் புது வீடு வாங்குவது, அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வது போன்ற விடயங்களில் ரிஸ்க் எடுக்கும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது.



மொத்தத்தில், ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் அதிக இழப்புகளை சந்திப்பீர்கள். ஆனால் குரு வக்கிர கதி அடையும் காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் நிதி பிரச்சனைகள் குறைவதை நீங்கள் கவனிப்பீர்கள். இது சாதகமான அறிகுறியாக இருக்காது.

Prev Topic

Next Topic