குரு பெயர்ச்சி (2021 - 2022) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

செப்டம்பர்15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை அதிக செலவுகள் (50 / 100)



சனி பகவான் மற்றும் குரு முன்னோக்கி பெயர்ந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்கள். உங்கள் விரிய ஸ்தானம் பாதிக்கப்படுவதால், நீங்கள் சரியான தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிப்பீர்கள். உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம். ஆனால், செலவுகள் பல மடங்கு நீங்கள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.


உங்கள் வேலை சுமை அதிகரித்துக் கொண்டே போகும். நீங்கள் கடுமையாக வேலை பார்த்தால் மட்டுமே பதவி உயர்வை எதிர்பார்க்க முடியும். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு எதிரான சாதிகள் நடக்கலாம். இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். தொழிலதிபர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். ஏழரை சனி நடை பெறுவதால் வரவிருக்கும் ஆண்டுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து அதற்கேற்ற வாறு உங்கள் தொழிலை நீங்கள் தொடர்ந்து நடத்த முயற்சிக்க வேண்டும்.

பயணம் உங்களுக்கு அதிக செலவுகளை இந்த காலகட்டத்தில் தரலாம். ஆடம்பர பொருட்களை அதிகம் வாங்குவதை தவிர்த்து விட்டு, நீங்கள் பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டும். பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்வதை இந்த பக காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. அத்ரிஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் உங்களுக்கு எந்த அதிர்ஷ்டத்தையும் தராது. நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். வரவிருக்கும் காலகட்டங்கள் உங்களுக்கு மோசமாகலாம் என்பதால் நீங்கள் இந்த பாகத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட முயற்சிக்க வேண்டும்.



Prev Topic

Next Topic