![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | உடல் நலம் |
உடல் நலம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
இந்த ஜென்ம குருவின் தொடக்கத்தில் உங்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து விடயங்களை மேலும் மோசமாக்குவார். உங்கள் பெற்றோர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அதனை உங்களால் மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்ய முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் மது மற்றும் புகை பழக்கங்களுக்கு அடிமையாகி விட நேரலாம். இதன் தாக்கம் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் அதிகமாக இருக்கும்.
குரு வக்கிர கதி அடைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4 இல் பெயருவார். ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை நீங்கள் உங்கள் பிரச்சனைகளின் தாக்கங்கள் குறையும் என்பதை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உடல் நலம் பாதித்தாலும், சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic