குரு பெயர்ச்சி (2021 - 2022) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

வழக்கு


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீதிமன்ற வழக்குகளை தவிர்த்து விடுவது நல்லது . அனைத்து முக்கிய கிரகங்களும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு சாதகமற்ற தீர்ப்பால் பண இழப்பு ஏற்படலாம். மேலும் குழந்தை காவல் மற்றும் ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போகலாம். கிரிமினல் வழக்குகளில் இருந்து உங்களால் வெளி வர முடியாமல் போகலாம். வருமான வரி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.

உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது தான். நீங்கள் இந்த காலகட்டத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும், மேலும் நீதமன்ற வழக்குகளையும், யாரைப் பற்றியும் உங்கள் கருத்தை தெரிவிப்பதையும் தவிர்த்து விடுவது நல்லது.



ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை குரு வக்கிர கதி அடைவதால் விடயங்கள் சற்று முன்னேற்றம் அடையலாம். இது ஒரு தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், நீங்கள் விரைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும். தேவைப்பட்டால், நீங்கள் நீதிமன்றம் செல்லாமல் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது நல்லது. அப்படி இல்லி என்றால், உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே நீங்கள் செயல்பட வேண்டும்.

Prev Topic

Next Topic