குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

காதல்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ஜென்ம ராசியிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையை மிகவும் பாதித்திருந்திருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான இந்த குரு பெயர்ச்சி கால்கட்டத்தில் அதிகம் பாதிப்புகளை சந்திக்க நேரலாம். பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் பிரியவும் வாய்ப்பு உள்ளது.

முடிந்த வரை புதிய உறவைத் தொடங்கும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் உண்மையான காதலோடு உங்கள் காதலை தெரிவிக்க முயற்சி செய்தாலும், அதனால் நீங்கள் அவமாப்படும் நிலை ஏற்படுவதோடு, நீங்கள் ஏமாற்றவும் படலாம். மேலும் நீங்கள் ஒரு தவறான நபரை அணுகுவதால், உங்கள் சொந்த வாழ்க்கையும், மன ரீதியாகவும் நீங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படலாம். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம்.



பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் விடயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல புரிதலோடு, தங்களுக்குள் இருந்து கருத்துவேறுபாடுகளை விட்டு, ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நீங்கள் குழந்தை பேருக்கு திட்டமிடுகுரீர்கள் என்றால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து நீங்கள் திருமணம் செய்ய முயற்சிக்கலாம்.

Prev Topic

Next Topic