குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் – கும்ப ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

ஜனவரி 2020 முதல் உங்களுக்கு ஏழரை சனி (7½ ஆண்டுகள்) நடைப் பெற தொடங்கி இருக்கும். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த மாதங்களில் உங்களுக்கு கலவையான பலன்களைத் தந்திருப்பார். இப்போது நீங்கள் ஜென்ம குரு மற்றும் ஏழரை சனியால் அதிக சவால்களை சந்திப்பீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உத்தியோக வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை சந்திப்பீர்கள்.

சாதிகள் மற்றும் அரசியல்களால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். பண இழப்பு மற்றும் உத்தியோக இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) உங்கள் பிரச்சனைகள் உங்கள் கட்டுபாட்டை மீறி போகலாம். நீங்கள் இந்த ஆண்டு ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். உங்கள் அனைத்து முதலீடுகளையும், நிரந்தர வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாற்றி விட வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், உங்கள் சொத்துக்களை நீங்கள் இழக்கும் வாய்ப்பு உள்ளது.


ஆனால் பாகம் 2 (ஜூன் 2௦, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை) மற்றும் பாகம் 4 (அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை) உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் இந்த காலகட்டத்தில் பெரும் அளவு குறையும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சுப காரியங்கள் நடத்தலாம்.

மொத்தத்தில், நீண்ட காலத்திற்கு நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே செயல்பட வேண்டும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை நடைப் பெரும் குரு பெயர்ச்சியால் ஏற்படும் மோசமான பாதிப்புகளை நீங்கள் கடக்க முயற்சிக்க வேண்டும்.

Prev Topic

Next Topic