குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை சிறப்பான முன்னேற்றம் (65 / 100)



குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரித்து வக்கிர கதி அடைகின்றார்கள். இதனால் உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் உண்டாவதால், நீங்கள் சிறப்பான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு கடந்த பாகத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் தற்போது இருக்காது. விடயங்கள் விரைவாகவே உங்களுக்கு சாதகமாக மாறும். இருப்பினும், ஒரே இரவில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், நல்ல மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது. இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக உள்ளதால், நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் இன்னும் சோதனை காலத்தில் மட்டுமே இருக்குறீர்கள்.


உங்கள் மகன் மற்றும் மகளுக்கு நீங்கள் திருமணம் நிச்சயிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர முயற்சிக்கலாம். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

அலுவலகத்தில் விடயங்கள் இலகுவாகும். நீண்ட காலமாக நீங்கள் சம்பள உயர்வுக்கு காத்திருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை என்றாலும், குறைந்த விகிதத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், இந்த காலகட்டத்தில் புதிதாக வேலை வாய்ப்பிற்கு நீங்கள் முயற்சி செய்யலாம். தொழிலதிபர்கள் கணிசமான லாபத்தை காண்பார்கள். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் பங்கு சந்தை வர்த்தகம் செய்ய ஊக்கவிக்க மாட்டேன்.



Prev Topic

Next Topic