![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
ஏழரை சனி தொடங்கியதால், நீங்கள் முன்பே மோசமான காலகட்டத்தில் உள்ளீர்கள். தற்போது உங்களுக்கு ஜென்ம குருவும் சேர்ந்து உங்கள் நிலையை அலுவலகத்தில் மேலும் மோசமாக்குவார்கள். உங்களுக்கு பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு எதிரான அரசியலும், சதிகளும் ஏற்பட வாய்புகள் உள்ளன.
உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிப்பதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம். நீங்கள் உங்கள் முதலாளியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட நேரலாம். நீங்கள் பதவி உயர்வை எதிர்பார்கின்றீர்கள் என்றால், மாறாக உங்களுக்கு எச் ஆரிடம் இருந்து உங்கள் செயல்திறம் முன்னேற்றம் குறித்த நோட்டீஸ் வரலாம். அப்படி நடந்தால், நீங்கள் புது வேலை தேட உங்களை தயார் படுத்திக் கொண்டு, நேர்காணலுக்கு செல்ல முயற்சிக்க வேண்டும். அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அலுவலகத்தில் நீங்கள் அவமானப்படும் சூழலும் உண்டாகலாம்.
ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். நீங்கள் புது வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால், குறைந்த சம்பளத்தில் தற்காலிகமான வேலை கிடைக்கும். உங்கள் குடியேற்ற மற்றும் இடமாற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் பெரும்.
Prev Topic
Next Topic