![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 20, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை பொருளாதார லாபம் (75 / 100)
இறுதியாக நவம்பர் 2௦, 2021 அன்று குரு முன்னோக்கி உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயருவார். உங்கள் சோதனை காலம் முடிந்து விட்டதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்களுக்கு ஏற்பட்ட தடைகளில் இருந்து நீங்கள் வெளிவருவதால், நல்ல மாற்றங்களை காண்பீர்கள். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்ய உதவுவார். சனி பகவான், ராகு மற்றும் கேதுவின் தாக்கம் குறைவாக இருக்கும். உங்கள் மனக் கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு நீங்கள் திருமணம் நிச்சயிப்பீர்கள். சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், அல்லது புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விரைவாக உங்கள் கடனை அடைத்து விடுவீர்கள். பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு பண வரத்து உண்டாகும். நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர முயற்சிக்கலாம். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி விரைவாக ஒப்புதல் பெரும். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆப்சன் / ப்யூச்சர் ஆகிய வர்த்தகம் செய்ய உங்களுக்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic