![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை சிறப்பான நேரம் (75 / 100)
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ந்து உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நல்ல அத்ரிஷ்டத்தை உண்டாக்குவார். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் உடல் நல பிரச்சனைகளுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். இந்த பாக காலகட்டத்தில் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தலாம்.
உங்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களது கடின உழைப்பிற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மேலாளர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உங்கள் வருமானம் அதிகரிக்கும், செலவுகள் குறையும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இந்த குறுகிய காலகட்டத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வங்கிக் கடன் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெரும். பயணம் உங்களுக்கு கலவையான பலனைத் தரும். குடியேற்றம் போன்றவற்றில் உங்களுக்கு இருந்த பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளிவருவீர்கள்.
பங்கு சந்தை முதலீடுகளில் மிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் உங்களுக்கு இருந்தால், நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயரலாம். உங்கள் வீடு கட்டுமான நிபுணருடன் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால், அது நல்ல தீர்வைப் பெரும். மொத்தத்தில் இந்த பாக காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
Prev Topic
Next Topic