குரு பெயர்ச்சி (2021 - 2022) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

உடல் நலம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், சனி பகவான் 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு அழுத்தமான சூழ்நிலையை உண்டாக்குவதோடு, தூக்கமில்லாத இரவுகளையும் உண்டாக்குவார்கள். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து அனேக நேரங்களில் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம், இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.


நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு சரியாக ஜீரனமாவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள், மேலும் திட உணவுகளை விட அதிக பழங்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் அறுவைசிகிச்சை செய்ய நினைத்தால், அதனை ஜூன் 20, 2021க்கு முன் அல்லது நவம்பர் 2௦, 2021க்கு பிறகு செய்ய முயற்சிப்பது நல்லது. குரு மற்றும் ராகுவின் பலத்தோடு உங்கள் மருத்துவ செலவுகளை நீங்கள் மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து விடுவீர்கள். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் உங்களுக்கு பலம் அதிகரிக்கும்.

Prev Topic

Next Topic