![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - Aries – மேஷ ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு குரு பெயருகிறார். உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நல்ல பலனைத் தரக்கூடிய ஒரு பெயர்ச்சியாக இது இருக்கும் என்பது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம்.
குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் மகர ராசிக்கு பெயருவதால் உங்கள் அதிர்ஷ்டத்தில் முன்னும் பின்னுமாக சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம். பாகம் 1, 4, மற்றும் 5-இல் நீங்கள் நல்ல பலன்களை காண்பீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் சுப காரியங்கள் நடத்தலாம், மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்க முயற்சி செய்யலாம். ஆனால் பாகம் 2 மற்றும் 4-இல் உங்களுக்கு அதிக பிரச்சனைகளும், சவால்களும் ஏற்படும்.
இருப்பினும், சாதகமற்ற நாட்களை விட நல்ல நாட்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு நேரம் எப்போது சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் பார்த்து பாதுகாப்பாக செயல்பட்டால் சிறப்பான பலன்களை நீங்கள் பெறலாம். மூச்சு பயிற்சி செய்து, விஷ்ணு சஹாசர நாமத்தை கேட்டு வந்தால் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
Prev Topic
Next Topic