![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | இரண்டாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை எதிர்பாராத பின்னடைவுகள் (35 / 100)
குரு கும்ப ராசியில் வக்கிர கதி அடைவதால் எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். வக்கிர கதி அடையும் சனிபகவான் உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். ஆனால் வக்கிர கதி அடையும் குரு உங்களுக்கு சனி பகவானிடம் இருந்து கிடைக்கும் நல்ல பலன்களை செயல் இழக்க செய்வார். செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். ஆனால் உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படும், இதனால் உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.
உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். குறிப்பாக உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் சுப காரியங்கள் நடத்த முயற்சிப்பது இந்த பாகத்தில் நல்ல யோசனையாக இருக்காது. இந்த பாகத்தில் உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகம் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதையும், புது வீட்டிற்கு குடி பெயருவதையும் தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic